UPDATE


ஆயத்தமாக இருங்கள்….

2021 - 2023 காலப்பகுதிற்கான வங்கித் துறையின் கூட்டு ஒப்பந்தம் 01.01.2021 இல் ஆரம்பிக்கப்பட்டு முகாமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி, தீர்மானித்து இப்பொழுது இறுதியாக கையொப்பமிட்டு நிறைவு செய்ய வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளோம்.

ஆயினும் குறித்த தினத்திலிருந்து 10 மாதங்களுக்குப் பிறகும், எந்தவொரு அரச வங்கியிலும் கூட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முடியாமல் போனது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம்.

தனியார் வங்கிகளாகிய commercial Bank மற்றும் standard chartered Bank போன்றன புதிய கூட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதுடன் மேலும் பல வங்கிகள் கூட்டு ஒப்பந்தத்தின் இறுதி கட்டத்தில் உள்ளன.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் SMIB என்பன கடந்த ஆண்டு இறுதியில் கூட்டு ஒப்பந்த திட்டங்களை முகாமைத்துவத்திற்கு சமர்ப்பித்து பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்டின. அந்தந்த வங்கிகளின் இயக்குநர்கள் சபைகள் குறிப்பிட்ட பிரேரனையை பரிந்துரைத்து, இறுதி ஒப்புதலுக்காக நிதி அமைச்சிற்கு அனுப்பி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது, ஆனால் நிதி அமைச்சு இன்னும் அதற்கான அனுமதியினை வழங்கவில்லை.

மேற்குறிப்பிட்ட அரச வங்கிகளின் கூட்டு ஒப்பந்தங்கள் முடிவடையாததால், RDB, HDFC வங்கி மற்றும் இலங்கை சேமிப்பு வங்கி ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தங்களை நிறைவு செய்ய முடியாமல் உள்ளது.

அதன்படி, அனைத்து அரச வங்கிகளின் கூட்டு ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படுவது தடைப்பட்டுள்ளமை அரச வங்கிகளின் தொடர்ச்சியான தொழிற்பாட்டிற்கு ஓர் சிக்கல் நிலைமையை உருவாக்கி உள்ளது.

இந்த முறை கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் பொழுது நாட்டில் கடுமையான சுகாதார பிரச்சனை காணப்பட்டது. கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது, நாட்டின் அனைத்து நிலைமைகள், பொருளாதார நடத்தை மற்றும் உலகளாவிய தொற்றுநோய் நிலை ஆகியவற்றை கவனத்தில் எடுத்து ஊழியர் சங்கம் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை. ஆனால் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்திற் கொண்டு ஓர் பொறுப்புள்ள சங்கமாக எங்கள் இறுதி ஒப்புதலை வழங்கியிருந்தோம்.

சங்கத்தின் இந்த நெகிழ்வான கொள்கையை குறை மதிப்பு செய்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த 1 1/2 வருடங்களாக கடுமையான தொற்றுநோயை எதிர்கொண்டு, வங்கித் துறைக்கு தொடர்ச்சியான சேவையை வழங்கிய சந்தர்ப்பங்கள் முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 5,000 வங்கி ஊழியர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் பல இறப்புகளும் பதிவாகியுள்ளன. வங்கி சேவை ஒரு அத்தியாவசிய சேவையாக இருந்ததனால், கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியிலும் கிளைகளைத் திறப்பதன் மூலம் செய்யப்படும் சேவையை குறைத்து மதிப்பிடுவது துரதிர்ஷ்டவசமானது.

தடுப்பூசி வழங்கும்போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொதுத்துறைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட போதிலும், வங்கி ஊழியர்களுக்கு இன்னும் அத்தகைய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. கடன் நிவாரணம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்துவது, போக்குவரத்து உணவு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளிட்ட கடினமான சூழ்நிலையில் இரவும் பகலும் உழைக்கும் வங்கி ஊழியர்களின் உரிமைகளில் இத்தகைய புறக்கணிப்பை ஏற்க முடியாது.

மேலும், பல அரச நிறுவனங்களின் கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவுச்செய்யப்பட்ட சூழலில் அரசு உடமை வங்கிகளின் உரிமையை விலக்குவது நியாயமானதல்ல.

ஒவ்வொரு ஆண்டும் பில்லியன்களில் திறைசேரியை நம்பியிருக்கும் அரச நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும் அங்கீகாரத்தை விட சிறிதளவேனும் அரச வங்கிகளுக்கு வழங்காதது கடுமையான அநீதி.

23/09/2021 அன்று நடைபெற்ற சங்க நிறைவேற்றதிகார குழு கூட்டத்தில், கூட்டு ஒப்பந்தங்களை அங்கீகரிப்பதில் மற்றும் கையெழுத்திடுவதில் மேலும் தாமதம் தொடரப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. மிகுந்த பொறுமைகாத்து வந்தும் முடிவில்லாத சூழலில், தொழிற்சங்கம் 07/10/2021 இல் திகதியிட்டு 13/10/2010 முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஏற்க முடிவு செய்து அனைத்து அரச வங்கி முகாமைத்துவங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையின் அனைத்து விடயங்களும் தயார் செய்யப்பட்டு உங்களுக்கு அனுப்பப்படும்.

அதற்காக தயாராக இருக்குமாறு சகோதரத்துடன் கேட்டுக்கொள்கி

அரசு வங்கிகளின் முகாமைத்துவ நிர்வாகிகளுக்கு….

வங்கி ஊழியர்களின் கூட்டு ஒப்பந்தங்களில் மேலும் தாமதங்கள் அவர்களுக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரை ஊழியர் கடன்களை வசூலிப்பது விரைவில் நிறுத்தப்பட வேண்டும். மேலும், கூட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தாமதப்படுத்துவதில், அரச வங்கிகளுக்கிடையேயான சுமூகமான செயல்பாட்டின் தாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வலியுறுத்தப்பட வேண்டும்.

வங்கி முறைமையை வலுப்படுத்துவோம்….

அரச வங்கிகளின் கூட்டு ஒப்பந்தத்தினை நிறைவு செய்வோம்.....


@ Ceylon Bank Employees Union.

Solution by TekGeeks