UPDATE


போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன ! கூட்டு உடன்படிக்கைப் போராட்டம் தீவிரமடைகின்றது !

 

கூட்டு உடன்படிக்கை கலந்துரையாடல்களின் போது நாட்டின் நிலைமை, பொருளாதாரத்தின் நடத்தை போன்றவை குறித்தும் கவனம் செலுத்தி சங்கம் எதிர்பார்த்த மட்டத்திற்கு குறித்த பரிந்துரைகள் வந்திராவிட்டாலும் கூட அனைத்து தரங்களுக்கும் இயன்றளவில் நியாயம் கிட்டும் விதத்தில் இறுதி இணக்கப்பாட்டினை வழங்கியதற்குக் காரணம் அந்த கூட்டான பேரம் பேசுதலின் இறுதிப் பெறுபேறாகவேயாகும். அதற்கமைய வங்கிகளின் பணிப்பாளர் சபைகளின் இணக்கப்பாட்டுன் பரிந்துரைக்கப்பட்ட அந்த முன்மொழிவுகளை நிதியமைச்சிற்கு சமர்ப்பித்து ஒரு மாதத்திற்கும் மேலான காலம் கடந்துள்ளது. அதனிடையே பல்வேறு காரணங்களைக் காட்டி கூட்டு உடன்படிக்கை தொடர்பில் தாமதம் நிலவிய போதும் சங்கம் இதுவரையில் கடைப்பிடித்த நெகிழ்வுத் தன்மையானது கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது.

அவ்வாறே அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகள் முடிவுறாமையினால் பிரதேச அபிவிருத்தி வங்கி, HDFC வங்கி மற்றும் இலங்கை சேமிப்பு வங்கி எனும் அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளும் தற்போது முடங்கிப்போயுள்ளன. அதற்கமைய இந்த தேவையில்லாத தாமதம் அரச வங்கிகளின் இருப்பு தொடர்பிலும், வங்கி ஊழியர்களின் நாளைய தினம் தொடர்பிலும் பெரும் அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளது.

அதற்கமைய சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குள் வந்துள்ளதுடன் போராட்டத்தினை வெற்றியுடன் முடித்துக் கொள்ளும் வரையில் சங்கம் ஓயாது.

இன்றைய தினம் கொழும்பு நகரம் பூராவும் போஸ்டர்களை ஒட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பொதுமக்களை அறிவுறுத்தவும் சங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கூட்டு உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போராட்டம் வெல்க !


@ Ceylon Bank Employees Union.

Solution by TekGeeks